Spotlightசினிமா

யார் மனசையும் புண்படுத்த வேண்டாம்; விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கட்டளை!

ஜித் நடிக்கும் அடுத்த் படத்தை இயக்குகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதற்கா வேலைகளில் இயக்குனர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இப்படத்தில் அஜித், ஒரு உணவு நிறுவனத்தின் ஓனராக வருவதாக தகவல் கசிந்தது. ஒரு இளைஞன் எப்படி உழைத்து வாழ்வில் முன்னுக்கு வருகிறான் என்ற தோணியில் கதை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ஆர்கானிக் விவசாயிகளை பெருமைப்படுத்தும் பல வசனங்கள் இருந்தாலும், கார்ப்பரேட் முதலாளிகளை வசைபாடும் பல வசனங்களும் இருக்கிறதாம்.

கார்ப்பரேட் ஓனர்களை புண்படுத்த வேண்டாம் எனவும் அந்த வசனங்கள் அனைத்தையும் தூக்கி விடுங்கள் எனவும் அஜித் கூறிவிட்டாராம். யார் மனதையும் நாம் புண்படுத்த வேண்டாமே எனவும் அஜித் விக்னேஷ் சிவனிடம் கூறிவிட்டாராம்.

இதனால், மீண்டும் வசனங்களை எழுதும் பணியில் உட்கார்ந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Facebook Comments

Related Articles

Back to top button