Spotlightசினிமா

சிவகார்த்திகேயனோடு துணிந்து மோதும் நட்புகள்!

லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள “ நட்புனா என்னானுதெரியுமா” என்ற திரைப்படத்தை “க்ளப் போர்டு ப்ரொடக்ஷன்” நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

இப்படத்தை லிப்ரா ப்ரொடக்ஸன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். சிவா அரவிந்து இயக்கி உள்ளார் .

கவின் ஹீரோவாகவும் , ரம்யா நம்பீசன் ஹீரோயின்ஆகவும் , அருண்ராஜா காமராஜா மற்றும் ராஜு ஹீரோவுக்கு இணையான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

வரும் 17 ஆம் தேதி இப்படத்தினை திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள். அதே 17ஆம் தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது.

திரைக்கு பின்னால் சிவகார்த்திகேயனோடு, ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் நடித்த அனைவரும் நண்பர்களாக இருந்தாலும், களம் என்று வந்தால் மோதித்தானே ஆக வேண்டும். இரண்டு படங்களும் வெற்றி அடைய அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button