Spotlightவிமர்சனங்கள்

சந்தித்த போது என்ன சம்பவம்.? நான் அவளை சந்தித்த போது விமர்சனம்

Casting : Santhosh Pradap, Shanthini, Innocent, GM Kumar, Sujatha
Directed By : LG Ravichandar
Music By : Hithesh Murugavel
Produced By : VT Rithish Kumar

கோவை பகுதிகளில் 1995-96 ஆண்டுகளில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார் எல்ஜி. ரவிச்சந்திரன்.

சினிமாவில் ஆர்கே. சுந்தரராஜனிடம் உதவி இயக்குநராக பணி புரிகிறார் சந்தோஷ். அப்போது சென்னைக்கு வரும் சாந்தினியை சந்திக்கிறார்.

சாந்தினியோ தன் உறவினர் முகவரியை தொலைத்துவிட்டதால் வழி தெரியாமல் நிற்கிறார். மேலும் சில பிரச்சினைகளை சந்திக்கிறார்.

இதனால் சாந்தினியை அவரது கிராமத்தில் கொண்டுவிடுகிறார்.

இவர்கள் ஒன்றாக சென்றதால் அங்கு பஞ்சாயத்து தவறாக நினைக்கிறது. பஞ்சாயத்து எடுத்து தவறான முடிவால் இவர்களுக்கு திருமணமும் நடக்கிறது.

எங்க குடும்பத்தில் இந்த திருமணத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. உன்னோடு வாழ முடியாது என ஊரை விட்டு ஓடி விடுகிறார் சந்தோஷ்.

அதன்பின்னர் சாந்தினி என்ன செய்தார்? சந்தோஷ் இயக்குநர் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்த வாரம் டிசம்பர் 27ல் மட்டும் சந்தோஷ்க்கு 2 படங்கள் ரிலீசாகியுள்ளது. எனவே அவருக்கு முதலில் வாழ்த்துக்களை சொல்லிடுவோம்.

இந்த படத்தில் உதவி இயக்குநர்கள் படும் வாழ்நாள் கஷ்டங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்த நினைத்துள்ளார் சந்தோஷ். அதில் பாதியே ஸ்கோர் செய்கிறார். வெரைட்டி காட்டி நடித்திருக்கலாம்.

கணவனுடன் வாழ முடியவில்லை… பெற்றோர் ஆதரவும் இல்லை என பாவப்பட்ட கிராமத்து பெண்ணாக சாந்தினி சிறப்த நடிப்பை கொடுத்துள்ளார். கணவரின் தம்பி மனைவி இவரை அவமானப்படுத்தும் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார்.

சில காட்சிகளில் வந்தாலும் அட யார்ய்யா? இவர் என எல்லாரையும் கேட்க வைத்துவிடுவார் மலையாள நடிகர் இன்னசண்ட்.

ப்ளு பிலிம் படம் எடுக்கும் தயாரிப்பாளராக இவர் செய்யும் அரட்டைகளும் பேச்சும் நம்மை மறந்து கைத்தட்ட வைக்கின்றன.

இவர்களுடன் சுஜாதா, ஜி.எம்.குமார், சந்தோஷின் நண்பர்களாக நடித்திருக்கும் கோவிந்த் மூர்த்தி, சாம்ஸ் உள்ளிட்டோரின் நடிப்பும் பாராட்டுக்குரியது தான்.

செல்வாவின் ஒளிப்பதிவு சில காட்சிகளில் சரியாக இல்லை. ஒருவேளை 1996 ஆண்டுக்கு ஏற்ப காட்சியை வைத்திருப்பாரோ? ஹித்தேஷ் முருகவேலின் இசையில் பாடல்கள் ஓகே.

1990களில் நடந்த உண்மை சம்பவத்தை அப்படியே காட்ட நினைத்துள்ளார். ஆனால் சில காட்சிகளில் இன்றைய நவீன ரக கார்களை காட்டியுள்ளார். அதுபோல் கார் அப்போது இருந்ததா? என தெரியவில்லை.

பாட்ஷா பட சூட்டிங்கை பத்தி பேசுகிறார்கள். அதற்கு முந்தைய ப்ளாஷ்பேக்கில் 1996 காலண்டர் இருக்கிறது. அது எப்படி? என்பதுதான் புரியவில்லை. 1995ல் பாட்ஷா வெளியானது.

இதுபோல் சின்ன சின்ன விஷயங்களை சரியாக செய்திருந்தால் அந்த கால கட்ட காட்சிக்கு ஏற்ப நாமும் ஒன்றாகியிருக்கலாம்.

அம்மாவின் ஆசையை மகன் நிறைவேற்ற படும் கஷ்டங்களும் அந்த தியேட்டர் காட்சிகளும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. உண்மைச் சம்பவத்தை அப்படியே காட்டியிருக்கிறார். நன்றி.

Naan Avalai Sandhitha Pothu review

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close