Spotlightசினிமா

600 பக்க வசனம்; 28 மணி நேர நாடகம்.. சாதனைக்கு தயாராகும் ‘கவசம்’!

சிங்கப்பூரில் ‘கவசம்’ என்னும் நாடகத்தை மேடையேற்ற இருக்கிறது ‘அதிபதி’ நாடகக்குழு. சுமார் 600 பக்க வசனங்களோடு 60 நாடகக் கலைஞர்களோடு தொடர்ந்து 28 மணி நேரம் நாடகம் நடைபெறவிருக்கிறது.

‘இந்த கதையில் பல திருப்பங்களையும் மர்மங்களையும் நாங்கள் சேர்த்துள்ளோம். இந்நாடகத்தின் மையக் கதாபாத்திரமான ஈசனை சுற்றி ஐந்து கதாபாத்திரங்கள், கதை முழுவதும் பயணிப்பார்கள். இந்த கதை துணைக்கதைகளாக பயணிக்கும் என்று இக்கதையினை எழுதி இயக்கியிருக்கும் திரு. புகழேந்தி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் தமிழ் நாடகம் என்றும் ‘சிங்கப்பூர் புக் ஆப் ரெக் கார்ட்ஸில்’ சிங்கப்பூரில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் நாடகம் என்றும் சாதனை படைக்கவிருப்பது ’கவசம்’ நாடகத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம்.

இந்நாடகத்தின் மூத்த கலைஞர் திருவாட்டி செல்வராஜ் சாவித்திரி இந்த சாதனை நிகழ்வினை பற்றி கூறும்போது, ’உறக்கமின்றி தொடர்ந்து 28 மணி நேரம் நாடகம் நடத்தவிருப்பதால், கலைஞர்கள் அனைவருக்கும் மிகவும் நேர்த்தியாக பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தொடர்ந்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நாடகத்தை மேடையேற்றும் முயற்சியில் நான் ஈடுப்பட்டதால், தூக்கமின்றி நடிப்பது எனக்கு ஒரு சுமையாக தெரியவில்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதை சிறப்பாக செய்ய இந்த அனுபவம் கற்று கொடுத்துள்ளது, எனது தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது.’ என்றார்.

‘கவசம்’ வரும் சனிக்கிழமை, 13 ஜுலை அன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெறும். இயோ சூ காங் கிராஸ்ரூட்ஸ் கிளப் அரங்கத்தில் மேடையேற இருக்கும் இந்நாடகத்திற்கு நுழைவுச் சீட்டுகளைப் பெற 90998510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேல் விபரங்களுக்கு, www.facebook.com/Athipathi.Theatre என்ற இணைய தளத்தை நாடலாம்.

இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் ஆரம்பிக்கும் இந்நாடகத்தை யூ-டியூப் தளத்தில் நேரலையாக காணலாம்… இதோ லிங்க்

https://www.youtube.com/watch?v=3L5DdKSOP0I

Facebook Comments

Related Articles

Back to top button