Spotlightசினிமா

‘குயின்’ தொடரில் கெளரவ வேடத்தில் தோன்றும் கெளதம் வாசுதேவ் மேனன்!

எம்.எக்ஸ்.பிளேயருக்காக கெளதம் இயக்கும் ‘குவீன்’ தொடரில் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கவிருக்கிறார். ஓர் இயக்குநர் வேடத்தில் இந்தத் தொடரில் நடிக்கிறார்.

ஏழ்மை காரணமாக, தன் விருப்பத்துக்கு மாறாக நடிப்புத் தொழிலில் 15 வயதில் அறிமுகமாகும் சக்தி என்ற பெண், மக்களின் மனம் கவர்ந்த ராணியாக எப்படி மாறுகிறாள் என்ற பயணத்தின் தடங்களைச் சொல்லும் தொடர்தான் குவீன். பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்தச் சொல்லி நிர்பந்தப்படுத்தப்பட்டு படவுலகில் கால் பதிக்கும் சக்தியிடம் ஏற்படும் மாற்றங்களைச் சொல்வதுதான் ‘குவீன்’. முதல் பட இயக்குநர் ஸ்ரீதர் வேடத்தில்தான் கெளதம் வாசுதேவ் மேனன் ‘குவீ’னில் நடிக்கி்றார்.

முதல் பட இயக்குநர் என்பதால் சக்தியை முழுமையான நடிகையாக்குவதில் இந்தப் பாத்திரத்துக்கு பொறுப்பு அதிகம். சக்தியின் வாழ்க்கையில் அதிகம் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வேடம் இது. தன் முன்னால் இருக்கும் பாதையில் சக்தி பயணிக்கப்போகிறாளா அல்லது தனக்கான பாதையை தானேஅமைத்துக் கொள்ளப்போகிறாளா என்ற முடிவை எடுக்க உதவிய உந்துசக்தியாகவும் ஆசிரியராகவும் அமைந்த வேடம் இது.

இந்த கெளரவ வேடத்தில் நடிப்புது குறித்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்…

“உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களில்கூட நீங்கள் பெரிய அளவில் சாதிக்கலாம். நீஙகள் மகத்தான வாழ்க்கையைத் தேர்வு செய்கின்றீர்களா அல்லது சந்தோஷமான வாழ்க்கையத் தேர்ந்தெடுக்கின்றீர்களா என்பதைப் பொறுத்த விஷயம் இது. சந்தோஷமாக வாழ விரும்பினால் வுிருப்பமானதை செய்யவும்.
கேமராவுக்குப் பின்னால் நின்று, ஒருவரது திறமைகளை கணித்து வெளிக்கொணரச் செய்வதன் மூலம் அவருக்கு புதிய பலத்தையும், மிகுந்த நம்பிக்கையையும் கொடுக்க முடியும். இயக்குநர் ஸ்ரீதர் செய்தது இதைத்தான்.

சக்தி மாற்றமடைந்த இடமும் இதுதான். எனவேதான். ஸ்ரீதரின் பண்புகள், சித்தாந்தங்கள் மற்றும் அணுகுமுறைகள் இதில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே நான் ஏன் இந்த வேடத்தை ஏற்கக்கூடாது என்று நினைத்தேன்” என்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கும் இந்தத் தொடரில் ரம்யா கிருஷ்ணன், அனிகா சுரேந்திரன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

எம்.எக்ஸ்.பிளேயரில் இவ்வாண்டு டிசம்பர் 14 முதல் ‘குயின்’ தொடர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் இலவசமாக ஒளிபரப்பாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button