
சுபம் புரொடக்சன் சார்பில் நவீன் லக்ஷ்மன் மற்றும் அருண்குமார் தயாரிப்பில்
நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் நடிகர் ஆதேஷ் பாலா முதன் முறையாக நடனமாடி நடித்து அசத்தியிருக்கிறார்
அவருக்கு ஜோடியாக ரதி என்ற நாயகி நடித்து நடனமாடியிருக்கிறார்.
கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் வரிகளில் , பாடகர் கானா பாலா குரலில் பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு தீட்டு என்ற துள்ளல் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் காட்சிளுடன் கூடிய ஆல்பம் பாடல் உருவாகி வருகிறது
இந்த பாடலுக்கு மோகன் நடிக்கும் ஹரா திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.
பப்ஜி மற்றும் சில பெயரிடப்படாத படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். நடனம் கார்த்தி மாஸ்டர்.
இயக்குனர் நவீன் முன்னதாக படைத்தலைவி என்ற தலைப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதாக இயக்கிய குறும்படம் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது





