Spotlightசினிமா

விரதம் இருக்கும் நயன்தாரா.. காரணம் தெரியுமா..??

ல் கே ஜி படத்திற்கு பிறகு ஆர் ஜே பாலாஜி எழுதி, இயக்கும் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தினை குறித்து ஆர் ஜே பாலாஜி கூறும்போது, ‘ பேய் படங்களே அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. சிறுவயதில் நாம் பார்த்த அம்மன் படங்கள் தற்போது குறைந்து விட்டது. ஆகவே, இப்படத்தை நான் இயக்கவிருக்கிறேன்.

இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து கொடுப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே எங்கள் குழுவினர் அனைவரும் சைவத்திற்கு மாறி விட்டனர். கன்னியாகுமரில் பிரசித்தி பெற்ற பவானி அம்மனை மூக்குத்தி அம்மன் என்று அழைப்பார்கள். அதனாலே இப்படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயர் வைத்தேன்’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button