Spotlightசினிமா

இளைய தலைமுறைகளின் மனம் கவர்ந்த கமலி.. திரையரங்குகளில் படையெடுக்கும் மாணவ, மாணவிகள்!

ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் கயல் ஆனந்தி, பிரதாப் போத்தன் நடித்திருக்கும் படம் தான் ‘கமலி  From நடுக்காவேரி’. கடந்த வெள்ளியன்று இப்படம் திரையரங்கில் வெளியானது.

படம் வெளியானது முதலே நல்லதொரு விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில், கல்வியின் முக்கியத்துவத்தையும், நுழைவுத்தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு எனர்ஜியாகவும் இப்படம் அமைந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பள்ளி, கல்லூரி பெண்கள் பலரும் இப்படத்தை பார்க்க ஆவலாக வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் பள்ளிபாளையத்தில் உள்ள ராயல் சினிமாவில் இப்படத்தை காண பெண்கள் படையெடுத்து வந்தனர்.

படம் பார்த்த அனைவரும் படத்தின் இயக்குனருக்கு வாழ்த்துகள் கூறியதோடு, மாணவிகள் அனைவரும் கட்டாயம் இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button