Spotlightசினிமா

போனியாகாத ‘நேர்கொண்ட பார்வை’; அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

ஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் வெற்றியடைந்தும், அவர் அடுத்ததாக நடித்து வரும் நேர்கொண்ட பார்வை போனியாகாமல் இருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இன்னும் வியாபாரம் ஆகாமல் இருப்பது பலரை ஆச்சரியம் அடைய செய்துள்ளது. விஜய் ரசிகர்கள் இதுகுறித்து ‘போனியாகாத என்.கே.பி’ என்று கூட ஹேஷ்டேக் அமைத்து கிண்டல் செய்தனர்.

இந்த நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் வியாபாரம் ஆகாததற்கு ஒரே காரணம் தயாரிப்பாளர் போனிகபூர் என்று கூறப்படுகிறது. போனிகபூரின் பிடிவாதம் தான் இந்த படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் யோசிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒன்று அஜித் இந்த படத்தில் கிட்டத்தட்ட சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார். இந்த படத்தின் மெயின் கதை மூன்று பெண்களை தான் சுற்றி நடக்கும், பெரும்பாலான காட்சிகள் இந்த பெண்களை குறித்துதான் இருக்கும்.

கோர்ட் சீன்கள் மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகள் மட்டுமே அஜித்துக்கு இருக்கும் என்பதால் ‘விஸ்வாசம்’ ரேட்டை கொடுக்க விநியோகிஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் போனிகபூரோ ‘விஸ்வாசம்’ ரேட் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றாராம். இந்த பிரச்சனையால் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் இன்னும் வியாபாரம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close