
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிருகிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர், நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது,அவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்த போது, கடந்த ஆண்டு வருமானம் ரூ 1000 என குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தி வெளியில் தெரிய வர, நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டனர். இதுகுறிந்து கட்சியினரிடம் விசாரித்த போது, அது தவறுதலாக நடைபெற்று விட்டது, மீண்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
Facebook Comments