Spotlightவிமர்சனங்கள்

மாறன் – விமர்சனம் 1.5/5

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உருவாகியிருக்கும் படம் தான் “மாறன்”. இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தனுஷுக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், ஓடிடி வெளியீட்டை ரசிகர்களே ஏற்றுக் கொள்ளவில்லை…

கதைப்படி,

தனுஷின் அப்பா ராம்கி நேர்மையான பத்திரிகையாளர். நேர்மையின் விளைவாக எதிரிகளால் கொல்லப்படுகிறார் ராம்கி. சிறு வயதிலேயே தந்தையை மற்றும் தாயை இழந்த மாறன், தனது தங்கையை தன் பாதுகாப்பில் வளர்க்கிறார்.

தனுஷும் நேர்மையான பத்திரிகையாளராக வருகிறார். நேர்மையாக இருப்பதால் எதிரிகள் அதிகம்.. ஒருநாள் தனுஷின் தங்கை ஸ்மிருதி வெங்கட் கடத்தப்படுகிறார்.

அதன் பிறகு தனுஷ் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை..

1980-90 களில் வந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு பெயிண்ட் அடித்து மாறனாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள்.

அசுரன் கொடுத்த தனுஷா இப்படிப்பட்ட ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் என படம் பார்த்த பலர் தலையில் அடித்துக் கொண்ட காட்சியையும் காண முடிந்தது.

ஜி வி பிரகாஷ் இசையில் எந்த பாடலும் மனதில் ஒட்டவில்லை.. பின்னணி இசையும் பெரிதாக இல்லை… படத்தின் நாயகி மாளவிகா மோகன் எதற்காக இந்தம்படத்தை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை …

இப்படத்தில் பணிபுரிந்த நடிகரோ இயக்குனரோ எவரும் படத்திற்காக எந்த ஒரு மெனக்கெடலும் செய்யவில்லை என்பதே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது..

படத்திற்கு சற்று ஆறுதல் என்றால் அது தனுஷின் தங்கையாக நடித்த ஸ்மிருதி வெங்கட்..பார்ப்பதற்கு க்யூட்டாகவும் நடிப்பிலும் கொஞ்சம் கவனம் கொண்டு நடித்திருக்கிறார்.

வில்லனாக சமுத்திரக்கனி, சஸ்பென்ஸாக எட்டிப் பார்க்கும் அமீர் இருவரும் ஜொலிக்கவில்லை.

தான் செய்த குற்றத்தை ஞாயப்படுத்தும் அமீரின் கதாபாத்திரத்தை என்னவென்று சொல்வது.?

அனைவருமே செயற்கையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

துருவங்கள் 16 என்ற ஒரு ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு என்ன தான் ஆச்சு ?

மாறன் – ஏமாற்றம்..

Facebook Comments

Related Articles

Back to top button