
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியமான திமுக தலைவராவார்.
தற்போது கனிமொழி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதால் அவருடன், தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன், வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்ததாக கூறி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு தண்டுபத்து பகுதியிலுள்ள அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டுக்கு சோதனையிட சென்றனர்.
அப்போது போதிய வெளிச்சம் இல்லை என்பதால், திரும்பி சென்ற அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை மீண்டும் வருவதாக கூறியுள்ளனர். இதனால் தண்டுபத்து பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.





