
நடிகர்கள்: அமிதாஷ், சரத்குமா, காஷ்மீரா,
இயக்கம் & எழுத்து – சி அரவிந்த்ராஜ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : பாண்டிகுமார்
தயாரிப்பாளர்கள் : மனோஜ் & கிரிஷ்
வெளியீடு: சக்தி ஃபிலிம் பேக்டரி
தனது தங்கையின் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. வேறு வழியின்றி திருட்டு வேலையில் இறங்குகிறார் அமிதாஷ். அப்படி ஒருநாள் திருடும்போது, போலீஸ் அதிகாரியான சரத்குமாரிடம் சிக்கிக் கொள்கிறார்.
எப்படியாவது பணத்தை சம்பாதித்து வேலையை விட்டுச் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில், தவறான வழிகளிலெல்லாம் பணத்தை சுருட்டுகிறார் சரத்குமார்.
சரத்குமாரிடம் சிக்கிக் கொண்ட அமிதாஷ், தான் சொன்னதை செய்தால் மட்டுமே ரிலீஸ் செய்வதாக கூறிவிடுகிறார் சரத்குமார்.
அப்போது, பல வருட பழமையான பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை ஒன்று இவர்களின் கைகளில் சிக்க, அதை விற்பதற்காக ஏஜெண்டை அணுகுகின்றனர்.
அந்த சிலை விற்கப்பட்டதா.?? பண பேராசையில் இருக்கும் சரத்குமாரின் கதி என்னவானது.??? தங்கையின் மருத்துவ செலவிற்கு அமிதாஷ் என்ன செய்தார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
சாதாரண சிலை கடத்தல் கதை தான் என்று கடந்து செல்ல முடியாத அளவிற்கு திரைக்கதையை மிகவும் உயிரோட்டமாக கடத்தி கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் ஆங்காங்கே சற்று தடுமாறிக் கொண்டு சென்றாலும், இரண்டாம் பாதியில் டாப் கியர் போட்டு கதைக்களம் வேகம் கொண்டு பயணிக்கிறது.
அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று படம் பார்க்கும் அனைவரையும் சீட்டின் நுனிக்கு அழைத்துச் சென்று விட்டார் இயக்குனர். அதிலும், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஒட்டுமொத்த படத்தினையும் தூக்கி வைக்கும் அளவிற்கு தரமான காட்சியை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜ்..
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை உள்ள காட்சிக்கான விளக்கத்தை க்ளைமாக்ஸ் காட்சியில் 5 நிமிடங்களில் கூறி முடிப்பதெல்லாம் வேற லெவல்..
சிலைக்கான வெயிட்டேஜை இன்னும் சற்று அதிகமாகவே ஏற்றியிருந்திருக்கலாம். காதல் காட்சிகள் அதிகம் இல்லை… காஷ்மீராவிற்கான காட்சிகள் அதிகமில்லை…
நாயகனான அமிதாஷ், யதார்த்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சண்டைக் காட்சியில் அதகளம் செய்திருக்கிறார். விஐபி படத்தில் பார்த்த அமுல் பேபி வில்லனா இவர், என ஆச்சர்யப்படும் அளவிற்கு நச்’சென்ற ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
போர் தொழில் படத்தில் கொடுத்த ஒரு நடிப்பை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் சரத்குமார். அப்படத்தின் கதையில் இருந்து இப்படத்தின் கதைக்குள் அவரை ஏற்றுக் கொள்வதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்கிறது.,
மற்றபடி, குறைகளை கலைந்து கதையின் வேகம் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு நன்றாகவே கவனம் ஈர்த்துள்ளது.. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையா என ஒவ்வொரு பின்னணி இசைக்கும் பாடலுக்கும் கேட்க வைத்துள்ளது.
எந்த இடத்திலும் யுவனின் மேஜிக்கை நம்மால் அனுபவிக்க முடியவில்லை.
பரம்பொருள் – பரபரப்பாக்கும் க்ளைமாக்ஸ்…