Spotlightவிமர்சனங்கள்

பார்க்கிங் விமர்சனம் 

 

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஹிந்துஜா நடிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “பார்க்கிங்”..

இசையமைத்திருக்கிறார் சாம் சி எஸ்.

எம் எஸ் பாஸ்கரின் மாடி வீட்டில் வாடகைதாரராக இருக்கிறார் ஹரீஷ் கல்யாண். ஹரீஷ் கல்யாணின் மனைவியாக வருகிறார் இந்துஜா..

புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரீஷ். அந்த காரை நிறுத்த இடம் இல்லாமல் ஹவுஸ் ஓனர் ஆன எம் எஸ் பாஸ்கர் உடன் பிரச்சனை ஏற்படுகிறது.

ஆரம்பத்தில் இருவரும் போட்டி போட்டு யார் முதலில் வீட்டிற்கு வருகிறார்களோ அவர்களே நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் இந்த பிரச்சனை காமெடியாக வளர ஆரம்பிக்க. நாளடைவில் இந்த பிரச்சனையை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு செல்கிறார் ஹரிஷ் கல்யாண்.

கடைசியில் இந்த ” பார்க்கிங்” பிரச்சனை சுமூகமாக முடிந்ததா? இல்லையா? என்பது தான்

சென்னையில் வாழும் பலரும் சந்தித்த தினசரி சந்தித்து தலையாய பிரச்சனை இந்த பார்க்கிங்..

பல படங்களில் சிறிய காட்சியாக வந்து செல்லும் இந்த பார்க்கிங் பிரச்சனை, இப்படத்தில் கதையின் மூலமாக எடுத்து அதை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

சரியான கதையை மட்டும் எடுக்காமல், சரியான நடிகர்களையும் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்…

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில் பார்க்கிங் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

அனுபவ நடிகரான எம் எஸ் பாஸ்கர் படத்திற்கு மிகப்பெரும் பலம். தனது நடிப்புத் திறனை அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.

கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார் இந்துஜா..

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்..

இந்த வார விடுமுறைக்கு ஏற்ற படமாக பார்க்கிங் அமைந்திருபதில் மகிழ்ச்சி…

 

.

Facebook Comments

Related Articles

Back to top button