
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனக்கான மார்க்கெட்டை நிலைக்க வைத்திருப்பவர் நடிகை சமந்தா.
இவர் சமீபத்தில் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர், கடைசியாக ஓ பேபி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ஒரு ஹாரர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சமந்தா.
தமிழ் சினிமாவில் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துவரும் நயன்தாரா, அதிக பேய் படங்களில் நடித்து வருகிறார்.
இதே பாணியை தெலுங்கில் சமந்தா கையாள போகிறாராம். சமந்தா அடுத்து நடிக்கவிருக்கும் இந்த பேய் படத்தில் இவரே முன்னனி கதாபாத்திரமாம்..
தமிழுக்கு நயன்தாரான்னா தெலுங்குக்கு நான் இருந்துட்டு போறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்காராம் சமந்தா….
Facebook Comments





