Spotlightசினிமா

ஆட்டத்துக்கு தயாரான ‘ரஜினி’.. பேட்ட பராக்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உருவாகி வருகிறது ‘பேட்ட’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி என நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இப்படத்தின் இசையை வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் ஒரு சிங்கிள் 3 ஆம் தேதியும் மற்றொரு சிங்கிள் 6 ஆம் தேதியும், முழு ஆடியோவும் 9 ஆம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.ஓ வரும் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close