சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜிக்டோ-ஜியோ அமைப்பினை சேர்ந்த அமைப்பினர் சென்னையில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் காலை முதலே சென்னை முழுவதும் பரபரப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை பாபநாசம் பள்ளி ஆசிரியர் தியாகராஜன் போராட்டத்தில் பங்குபெற்றிருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தபோது தியாகராஜன் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். தியாகராஜன் கண் பார்வை இழந்த மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments