
விஜய் ஆண்டனி அவரே இயக்கி, நடித்து, இசையமைக்கும் ‘பிச்சைகாரன்-2’ படம் மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, “ நான் ஒரு படத்தை இயக்கத் திட்டமிடவில்லை, நான் படத்திற்கான கதையை எழுதி அதனை சசி சாரிடம் கொண்டுபோய் கொடுத்தேன், ஆனால் அவர் அந்த சமயத்தில் வேறொரு திட்டத்தில் பிஸியாக இருந்தார். அதன் பின்னர் நான் மற்றொரு இயக்குநரிடம் அணுகினேன், அவரால் இந்த படத்தை எடுக்கமுடியவில்லை. உடனே நானே இந்த படத்தை இயக்க முடிவு செய்து, அதன்படி இயக்குனராக மாறிவிட்டேன்.” என்று கூறினார்.
மேலும் 2016-ம் ஆண்டு வெளியான ‘பிச்சைகாரன்’ படத்தின் தொடர்ச்சி ‘பிச்சைக்காரன் 2’ அல்ல என்பதையும் விஜய் ஆண்டனி தெளிவுபடுத்தி இருக்கிறார். ‘பிச்சைக்காரன்’ படம் தாய்-மகன் உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாகக் கொண்டிருந்தது ஆனால் ‘பிச்சைகாரன்-2’ படம் அண்ணன்-தங்கை உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது