Spotlightவிமர்சனங்கள்

Poikkal kuthirai Movie review 3/5

யக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, ரைசா, ஜெகன், வரலட்சுமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “பொய்க்கால் குதிரை”. எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரபுதேவா, இப்படத்தின் கதை, நடிப்பு எந்த அளவிற்கு கைகொடுத்தது என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,

நாயகன் பிரபுதேவா ஒரு விபத்தில் தனது ஒரு காலையும் மனைவியையும் இழக்கிறார். தனது குழந்தை தான் உலகம் என எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பிரபுதேவா.

இநிலையில், பிரபுதேவாவின் மகளுக்கு உடலில் வித்தியாசமான ஒரு குறைபாடு வர, ஆப்ரேஷன் செலவிற்கு பல லட்சங்கள் தேவைப்படுகிறது.

இதனால், உடைந்து போய் உட்காரும் பிரபுதேவா செய்வதறியாது நிற்கிறார். ஊரின் மிகப்பெரும் புள்ளியாகவும் மிகப்பெரும் பிசினஸ் செய்பவராகவும் வரும் வரலக்‌ஷ்மியின் குழந்தையை கடத்தி அதன் மூலம் பணத்தைப் பெற திட்டம் தீட்டுவார் பிரபுதேவா.

அதற்கான வேலையிலும் இறங்குவார் பிரபுதேவா. இறுதியில் தனது மகளை காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும், சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் முழ்கடித்துவிட்டார் நாயகன் பிரபுதேவா. நடனத்தில் மிகப்பெரும் வல்லவரான பிரபுதேவா, இப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறார்.

கதையின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பான தேர்வு தான். ஜெயிலில் இருக்கும் பிரகாஷ்ராஜ், போலீஸ் அதிகாரியாக வரும் ஷியாம் இருவரும் கதையில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பிரபுதேவானின் மகளாக நடித்த சிறுமியின் நடிப்பை பாராட்டலாம்.

டி இமானின் இசையில் பாடல்கள் செம. பின்னணி இசையும் மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.

இடைவேளையில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை மேலும் கூட்டியது. படத்தின் இரண்டாம் பாதி வேகம் எடுத்து படத்தை ரசிக்க வைத்தது.

க்ளைமாக்ஸ் காட்சியில் டிவிஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் வைத்து படத்தின் க்தையை யாரும் யூகிக்க முடியாத வண்ணம் கதையை நகர்த்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார்.

இதற்கு முன் “A” பட இயக்குனர் என அறியப்பட்ட இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார், ஒரு தரமான பாசப்போராட்டம் கொண்ட ஒரு குடும்ப படத்தை இயக்கி குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறார்.

கதையோடு சேர்ந்து திரைக்கதையும் விறுவிறுப்பாக பயணம் புரிவதால் பொய்க்கால் குதிரையை பெரிதாக கொண்டாடலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button