Spotlightவிமர்சனங்கள்

சீதா ராமம் – விமர்சனம் 4/5

னு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி நேற்று பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “சீதா ராமம்”. இராணுவ வீரனின் காதல் கதை பல படங்கள் சினிமாவை ஆக்கிரமித்திருந்தாலும், அந்த படத்தில் இருந்து சீதா ராமம் எந்த வகையில் வேறுபட்டு நிற்கிறது என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,

இலண்டனில் படித்து வரும் ராஷ்மிகாவிற்கு அவசரமாக பத்து லட்சம் ரூபாய் தேவைப்பட, பாகிஸ்தானில் ஆர்மி தலைவராக இருந்த தனது தாத்தா சச்சின் கடேகரிடம் பணம் வாங்குவதற்காக பாகிஸ்தான் செல்கிறார். அங்கு, சச்சின் கடேகர் மறைந்த செய்தி அப்போது தான் ராஷ்மிகாவிற்கு தெரிகிறது.

ஒரு கடிதத்தைக் கொடுத்து இந்தியாவில் சீதா என்ற ஒரு பெண்ணிடம் ராஷ்மிகா அதை ஒப்படைக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறந்து விடுகிறார் சச்சின் கடேகர். அப்படி, அந்த கடிதத்தை சேர்த்தால் மட்டுமே தன்னுடைய சொத்து அனைத்தும் ராஷ்மிகாவிற்கு சேரும் என்று எழுதி வைத்திருந்திருக்கிறார். வேறு வழியின்றி கடிதத்தை எடுத்துக் கொண்டு இந்தியாவிற்கு பயணப்படுகிறார் ராஷ்மிகா.

சீதா கண்டுபிடிப்பதற்கு முன் அக்கடிதத்தை எழுதிய ராம் பற்றி விசாரிக்க துவங்குகிறார் ராஷ்மிகா.

ப்ளாஷ் பேக் பக்கம் கதை செல்ல 1960களில் பயணமாகிறது.

பெற்றோர்கள் இல்லாமல் தனியாக வளர்ந்து நிற்கும் துல்கர் சல்மான் (ராம்), இராணுவத்தில் பணிபுரிகிறார். மிகவும் தேர்ந்த வீரராக செயல்பட்டு வரும் துல்கர், அனைவருக்கும் பிடித்தமான அறிவுப்பூர்வமான வீரராகவும் இருக்கிறார்.

தனக்கு யாரும் இல்லை என்று ரேடியோ ஒன்றில் கூறுகிறார் துல்கர். இந்தியா முழுவதும் அவருக்காக கடிதம் எழுதுகின்றனர் பலர். அக்கடிதத்தில், அண்ணன் இருக்கிறேன், தம்பி இருக்கிறேன், தங்கை இருக்கிறேன் என பலரும் கடிதம் எழுதியிருந்த தருணத்தில் ”உங்களுக்காக காதல் மனைவி காத்திருக்கிறேன்” என்று சீதா (மிருணாள் தாகூர்) என்ற பெண்ணிடம் இருந்து கடிதம் வர, அதிலிருந்து இருவருக்குமான கடிதம் மூலமான காதல் வளர்கிறது.

இறுதியாக இந்த காதல் என்னவானது..?? கடிதம் சீதாவிடம் சென்று சேர்ந்ததா.? ராஷ்மிகாவிற்கும் இக்கதைக்கும் என்ன சம்மந்தம் என்பது படத்தின் மீதிக் கதை.

மிக அழகான காதல் ஓவியத்தை மிகவும் நெருடலான உணர்வு கொண்டு கதையை எழுதியிருக்கிறார் ஹனு ராகவபுடி. துல்கரின் ஒவ்வொரு பார்வையிலும் ஒவ்வொரு எமோஷ்னல் காட்சியிலும் அப்படியான ஒரு உணர்ச்சியை காண முடிகிறது. அழகு தேவதையாக படம் முழுவதும் வந்து நம்மை கண் இமைக்காமல் ரசிக்க வைத்திருக்கிறார் நாயகி மிருணாள் தாகூர்.

பிரின்ஸாக தோன்றிய மிருணாள், ரியலாகவே பிரின்ஸாகவே காட்சியளித்திருக்கிறார். ராஷ்மிகாவின் நடிப்பை பாராட்டலாம்.

“சீதா ராம்” ஆக நடித்து நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கின்றனர் இருவரும்.

அதிலும் இரண்டாம் பாதியில் வைத்திருந்த ட்விஸ்ட் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பிற்கு மேலும் பலமாக அமைந்திருந்தது. திரைக்கதை, வசனம் என இரண்டும் ஒருசேர பயணித்து நம் கண்களின் கண்ணீரை தொட்டுப் பார்த்துவிட்டுச் செல்கிறது.

எஸ் வினோத் & ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் இருவரின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி நம்மை கதையோடு ட்ராவல் செய்ய வைத்திருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரும் பலமே படத்தின் பின்னணி இசை தான். விஷால் சந்திரசேகரின் இசை மனதை நெருட வைத்து காட்சிகளை இசையோடு ரசிக்க வைத்திருக்கிறது.

பல படங்களில் இருந்தும் இந்த “சீதா இராமம்” வேறுபட்டு தனித்து நிற்கிறது. காதல் காவியங்களை ரசிக்கும் காதலர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாகவும், கடிதத்தில் காதல் புரிந்த காதலர்களுக்கு ஒரு நல்ல ஃபீல் குட் படமாகவும் “சீதா ராமம்” இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சீதா ராமம் – மற்றுமொரு காதல் கோட்டை..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close