Spotlightவிமர்சனங்கள்

பொன்னியின் செல்வன் 1 – விமர்சனம் 4.5/5

ல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் என்ற காவியத்தை பல வருடங்களாக பலரும் முயற்சித்தும் அதாவது எம் ஜி ஆர் காலத்தில் இருந்தே பலர் கை வைத்து பின்வாங்கிய பின்னர், இயக்குனர் மணிரத்னம் அதை கையில் எடுத்து அதன் முதல் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்திருக்கிறார்.

தமிழக மட்டுமல்லாது உலகமே இப்படத்தினை பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த காவியத்தை படித்த பலரும், இக்காவியத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றயும் ஒவ்வொரு உருவமாக பலரும் யூகித்து மனதில் வைத்திருந்த நிலையில், ஒவ்வொன்றிற்கும் உருவம் கொடுத்தது போல் கதாபாத்திரம் ஒவ்வொன்றையும் செதுக்கி கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

மணிரத்னம் இப்படத்தை ஒரு காவியமாக தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக இயக்கியிருக்கிறார்.

சுந்தர சோழராக நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்…. நாவலில் குறிப்பிட்டபடி, சோழ நாட்டின் அரசர்.

குந்தவை, அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் மூவரின் தந்தை.

ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். சோழ நாட்டின் அரசன் சுந்தர சோழரின் மூத்த மகன். இளவரசராக முடி சூடப்பட்டவர்.

உடல்மொழியாக இருக்கட்டும் போரில் தனது வீரத்தை காட்டும் வீரனாக தனது நடிப்பில் அனைவரையும் அசத்தியிருக்கிறார் விக்ரம்.

அருள்மொழி வர்மனாக தோன்றி அழகு சுந்தரராக தெரிகிறார் நாயகன் ஜெயம் ரவி. இவரே ராஜ ராஜ சோழனாக அவதரிக்கிறார். சோழ மக்களின் மனம் கவர்ந்த மன்னனாக திகழ்பவர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மன்மதன் போலவும் உலா வருபவர் தான் இந்த வந்தியத் தேவன். இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.

ஆதித்த கரிகாலன் சொல்தனை கேட்கும் வீரனாக இருக்கிறார் வந்தியத் தேவன். ஆதித்த கரிகாலனின் தங்கை குந்தவைக்கு தூதுவராகவும் இருக்கிறார்.

சுந்தர சோழனின் மகளாக குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து தனது அழகால் அனைவரையும் கட்டிப் போட்டிருக்கிறார் தென்னிந்திய தேவதை த்ரிஷா. சோழ நாட்டிற்கு வரப்போகும் பகையை எதிர்க்க திட்டம் வகுப்பதில் வல்லவராக இருப்பவர் இந்த குந்தவை… அழகில் மட்டுமல்லாது நடிப்பிலும் தனது அசாத்திய திறமையை கொடுத்திருக்கிறார் த்ரிஷா.

ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தை சரிக்க அவதாரமாய் தோன்றியவராய் வருகிறார் நந்தினி. இக்கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். பழுவூர் சிற்றரசரான பெரிய பழுவேட்டையரின் மனைவி. சோழப்பேரரசை அழிக்க திட்டம் தீட்டி தனது வில்லத்தனத்தை விசித்திரமாக காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

கண்களில் ஆரம்பித்து முக அழகில் அனைவரையும் சொக்க வைக்கும் பேரழகியாக வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நம்மை கவர்ந்திழுக்கிறார்.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் தோன்றியிருக்கிறார். இதில், பெரிய பழுவேட்டரையராக நடித்த சரத்குமாரின் மிகப்பெரும் வீரனாகவும் அசாத்திய பலம் கொண்டவனாக வருகிறார். சுமார் 64 விழுப்புண்களை கொண்ட போர் வீரனாக தோன்றி மிரள வைத்திருக்கிறார் சரத்குமார்.

சோழநாட்டின் முதல் மந்திரியான அநிருத்தப் பிரம்மராயரின் தலைசிறந்த தூதுவன் வருகிறார் ஆழ்வார்க்கடியான் நம்பி. இக்கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார் ஜெயராம்.

படத்தில் நடித்த சில கதாபாத்திரங்களை மட்டுமே சற்று பட்டியலிட்டு காட்டியிருக்கிறோம். படத்தின் கேரக்டர்கள் அனைத்தும் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து நமக்கு ஒரு புது உலகத்தை நம் கண்முன்னே காட்டிச் சென்றுள்ளனர்.

படத்தின் இரு தடவாளமாக கதையோடு பயணித்து நம்மை மிரளவும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியிருக்கின்றனர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும்.

பாடலிலும் சரி பின்னணி இசையிலும் சரி பல படங்களுக்குப் பிறகு புது இசையுலகத்தை நம் காதுகளுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

மன்னர் கால ஆட்சியாக இருக்கட்டும் போர் காட்சிகளாக இருக்கட்டும் இரண்டையும் ஒளிப்பதிவில் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி நம்மை அசர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

தோட்டாதரணியின் கலை படைப்பு ஒரு உலகத்தையே நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது.

தமிழர்கள் பெருமை கொள்ளும் ஒரு காவியமாகவே இருந்த வந்த ஒரு படைப்பை நம் கண்முன்னே கலைபடைப்பாக கொண்டு வந்த இயக்குனர் மணிரத்னத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்து கொள்வோம்…

முதல் பாதியில் கார்த்தி – ஜெயராம் இருவருக்குமான காட்சியை இன்னும் நகை உணர்வு ஊட்டும்படியாக கொடுத்திருக்கலாம்.

பொன்னியின் செல்வன் காவியத்தை படித்துவிட்டு படம் பார்த்தால் எளிதாக கதைக்குள் செல்ல முடியும்…

பொன்னியின் செல்வன் – காட்சிக்கு வந்த காவியத்தை உலக மக்கள் போற்றும் படைப்பு… 

Facebook Comments

Related Articles

Back to top button