Spotlightசினிமாவிமர்சனங்கள்

போர் தொழில் விமர்சனம் 3.5/5

றிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் போர் தொழில்.

கதைப்படி,

சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டாக வருகிறார் சரத்குமார். மிகவும் பயந்த சுபாவம் உடைய டிஎஸ்பி அசோக் செல்வன், சரத்குமாரிடம் பயிற்சி எடுப்பதற்காக வருகிறார். அசோக் செல்வனை வேண்டா வெறுப்பாக சேர்த்துக் கொள்கிறார் சரத்குமார்.

இந்நிலையில், திருச்சியில் ஒரு இளம்பெண் கைகட்டுப்பட்டு கொடூரமான முறையில் எந்த வித தடயமும் இல்லாமல் கொல்லப்படுகிறார். இந்த வழக்கு சரத்குமாரிடம் கொடுக்கப்படுகிறது.

வழக்கை விசாரிக்க சென்னையில் இருந்து அசோக் செல்வன் மற்றும் காவல்துறையில் பணிபுரியும் நிகிலா விமல் இருவரையும் அழைத்துக் கொண்டு திருச்சி செல்கிறார் சரத்குமார்.

இவர்கள் வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் அடுத்தடுத்த கொலைகள் அங்கு நடைபெறுகிறது.

ஒருகட்டத்தில் கொலைக் குற்றவாளி இவர் தான் என்றறிந்து அவரை தொடர்கின்றனர் சரத்குமார் & டீம். எதற்காக இந்த கொலை நடைபெறுகிறது.? அசோக் செல்வன் எந்த வகையில் சரத்குமாருக்கு உதவியாக இருந்தார்.?? என்பது படத்தின் மீதிக் கதை.

கடிந்து விழும் அதிகாரியாக சரத்குமார் தனது பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். தனது அனுபவத்தைக் கொண்டு ஒரு கொலைக் குற்றவாளி இப்படித்தான் கொலையை செய்திருப்பான் என்று குற்றவாளியின் மனப்போக்கில் அதை சொல்லும் விதத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் சரத்குமார்.

மற்ற படங்களில் இருந்து இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாகவே ஏற்று நடித்திருக்கிறார் சரத்குமார்., மனதிற்குள் பயத்தை வைத்துக் கொண்டு அதை வெளியில் சொல்லாமல் தைரியமாக இருப்பதாக எண்ணிக் கொள்ளும் கதாபாத்திரம் தான் அசோக் செல்வன்.

ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார். அதிலும், இந்த வழக்கை இறுதியில் முடிக்க இவரின் மூளை அசாத்தியமாக செயல்படுவது ரசிக்க வைத்தது..

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், கொடுக்கப்பட்டத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார் நிகிலா விமல்.

போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் பி எல் தேனப்பன், நேர்த்தியான நடிப்பை கொடுத்திருந்தார். படம் ஆரம்பித்ததுமே சிறு சிறு ஹியூமர் காட்சிகள் ரசிக்க வைத்திருப்பது இயக்குனரின் திறமை தான்.

தொடர்ந்து காட்சிகள் ஒவ்வொன்றையும் நகர்த்திச் சென்று, பார்க்கும் ரசிகர்களை படபடப்பாகவே இருக்கையின் நுனியில் இருக்க வைத்து விட்டார் இயக்குனர்..

அதிலும், கரும்பு தோட்ட காட்சியில் பக்..பக்.. பக்.. தான்

அசோக் செல்வன் வில்லன் வீட்டில் இருப்பது, இளம்பெண்ணை தூக்கும் காட்சி, ப்ளாஷ் பேக் காட்சி என வித்தியாசமான கோணத்தில் காட்சிகளை கொடுத்து கண் இமைக்காமல் காட்சிகளை காண வைத்தது இயக்குனருக்கான வெற்றியாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

படத்திற்கு பெரிதும் கை கொடுத்திருப்பது பின்னணி இசையும் ஒளிப்பதிவுமே.

கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு ஒரு த்ரில்லர் படத்திற்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை தெளிவாக கொடுத்திருக்கிறது.

கதையிலும் சரி திரைக்கதையிலும் சரி வேகமாக செல்கிறது முதல் பாதி. இரண்டாம் பாதியில் கதையில் சற்று சறுக்கினாலும் திரைக்கதையில் இயக்குனர் சற்று வேகம் காட்டியதால் பெரிதாக அதை குறையாக எடுத்துக் கொள்ள முடியாது.

போர் தொழில் – க்ரைம் த்ரில்லர் கதை விரும்பிகளுக்கு ஏற்ற படம்.

Facebook Comments

Related Articles

Back to top button