
பிரபுதேவா மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான வித்தியாசமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து MRP Entertainment தயாரிக்கும் இப்படத்திற்கு சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபுதேவா – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் தலைப்பு வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





