
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ள இப்படத்தின் வித்தியாசமான புரமோஷன் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு படக்குழுவினர் புதுமையான முறையில் விளம்பரம் செய்துள்ளனர்.
சமூக அக்கறை கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏற்கெனவே புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், கல்லூரிகளில் பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி படக்குழுவினர் இளைஞர்களிடையே படத்தைப் பிரபலப்படுத்தி வருகின்றனர்.
இப்படத்தில் ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, வாழை ஜானகி, அமுதவாணன், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு, திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜா மற்றும் பாலா இணைந்து இசையமைத்துள்ளனர்.
‘துரோகம் பழகு’ படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.





