Spotlightசினிமா

பேட்லர்ஸ் சினிமாவின் புதிய மியூசிக்கல் ஹாரர் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது; கதாநாயகனாக பிரேம்ஜி

‘வல்லமை’ திரைப்படத்தைத் தொடர்ந்து, பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரிக்கும் புதிய மியூசிக்கல் ஹாரர் திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்த திரைப்படத்தை கருப்பையா முருகன் தயாரித்து இயக்குகிறார். வித்தியாசமான கதைக்களம் மற்றும் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் மியூசிக்கல் ஹாரர் ஜானரில் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகி வருகிறது.

படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில், கதாநாயகனாக நடிக்கும் பிரேம்ஜி, மெல்வின் டேவிட், சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நடிகை அனுஹாசன் சிறப்பு தோற்றத்தில் (Special Appearance) நடித்துள்ளார்.

இப்படத்திற்கு நடிகர் பிரேம்ஜி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொள்கிறார். படத்தொகுப்பை விதுஜீவா கவனித்து வருகிறார்.

மியூசிக்கல் ஹாரர் ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள், வெளியீட்டு தேதி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button