
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் “ரிங் ரிங்”
பிரசாந்த் டி எஃப் டெக் ஒளிப்பதிவு செய்ய வசந்த் இசையமைத்திருக்கிறார். ஜெகன் நாராயணன் தயாரித்திருக்கிறார்.
படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருந்தது. தொடர்ந்து குடும்ப ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் கொண்டாடினர்.
இந்நிலையில், ஆஹா மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வரும் 21 முதல் இப்படம் ஸ்டிரீமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Facebook Comments