Spotlightசினிமா

ஆர் கே செல்வமணியின் பெப்சி தலைவர் பதவி பறிபோகிறது.?

ன்னும் சில தினங்களில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில், கே பாக்யராஜ் அவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருக்கிறார்.

இவரை எதிர்த்து தற்போதைய இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர் கே செல்வமணி போட்டியிடவிருக்கிறார். பெரும்பாலான இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி அவர்கள் மீது பெரும் அதிருப்தியில் இருப்பதாலும், எழுத்தாளர்கள் சங்கத்தில் கே பாக்யராஜ் அவர்களின் நிர்வாகத் திறமையைக் கருத்தில் கொண்டும் இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் கே பாக்யராஜ் அவர்கள் தான் வெற்றி பெற போவதாக கிட்டத்தட்ட முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் ஆர் கே செல்வமணி அவர்கள் தோல்வியடைந்தால் தற்போது அவர் வகித்து வரும் பெப்சி சங்கத் தலைவர் பதவியும் பறிபோகிவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏனென்றால்,

24 கிராப்ட் ஒன்றாக சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் பெப்சி. இதன் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால், 24 கிராப்ட்களில், ஏதேனும் ஒன்றில் தலைவராகவோ, செயலாளராகவோ அல்லது பொருளாளராகவோ இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும்பட்சத்தில், பெப்சி சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியானவராக கருதப்படும். இந்நிலையில், 24 கிராப்ட்களில் ஒன்றான இயக்குனர்கள் சங்கத் தலைவராக தற்போது ஆர் கே செல்வமணி இருப்பதால், பெப்சி சங்கத் தலைவராக தற்போது இருந்து வருகிறார்.

இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் ஆர் கே செல்வமணி தோற்கும் பட்சத்தில் அவர் தற்போது இருந்து வரும் பெப்சி சங்கத் தலைவரின் பதவி தகுதியிழந்ததாக கருதப்படும்.

மீண்டும் தேர்தல் நடைபெற்று 24 கிராப்ட்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் வாக்கெடுப்பு நடத்தி பெப்சி சங்கத் தலைவரை தேர்ந்தெடுப்பர்.

இது ஒருபுறம் இருக்க,

பெப்சி சங்கத்தின் நீண்ட கால போராட்டமான சம்பள உயர்வு பிரச்சனையை தற்போது தனது அரசியல் லாபத்திற்காக மடைமாற்றியிருக்கிறார் ஆர் கே செல்வமணி.

பெப்சி சங்கத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். இவர்களின் நீண்ட கால போராட்டமாக சம்பள உயர்வு பிரச்சனை இருந்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிர்வாக குளறுபடி, கொரோனா பேரிடர் என அடுத்தடுத்து பிரச்சனைகள் நடந்து வந்ததால் சம்பள உயர்வு பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் பதவி பொறுப்பேற்றதும், பெப்சியுடனான பேச்சுவார்த்தை, அடுத்தடுத்த கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அவசர கதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர் கே செல்வமணி, பேச்சுவார்த்தை முடிவுற்றது என்றும், சம்பள உயர்வுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துக் கொண்டது என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெறும் வாய் வார்த்தையாகவும் எவ்வித ஒப்பந்த பத்திரமும் இல்லாமல்  அறிவித்தார் ஆர் கே செல்வமணி.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இன்னும் முழுமையான பேச்சுவார்த்தை முடியவில்லை. அதற்குள் அதிக சதவிகிதம் சம்பள உயர்வு என்று பெப்சி தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்கள் அவசரகதியில் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் காரணம் என்ன? இந்த அறிவிப்பினால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி இறுதி செய்தபின் தயாரிப்பாளர் சங்கமும் , பெப்சியும் அது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்  தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவோம். அதன்பிறகுதான் சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும்.” என்று கூறியிருக்கிறார்.

ஆர் கே செல்வமணியின் இந்த போக்கால், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை இனி கிடப்பில் போட முடிவெடுத்துள்ளதாம் தயாரிப்பாளர்கள் சங்கம்.

இயக்குனர்கள் சங்கத்தேர்தலை மையப்படுத்தியே அவசர கதியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, இந்த சம்பள உயர்வை நான் தான் பெற்றுத் தந்தேன் என்ற பெருமையை சூட நினைத்திருந்திருக்கிறார் ஆர் கே செல்வமணி.

இவரது இந்த பதவி ஆசையால், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் மூலைப்பக்கம் போனது தான் மிச்சம். இறுதியில் சம்பள உயர்வு இன்றி வலியை சுமந்து நிற்பது தொழிலாளர்கள் தான்.

Facebook Comments

Related Articles

Back to top button