இன்று இந்திய நாடு முழுக்க கொரோனா வைரசுக்கு எதிராக ஜனதா ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் கோரிக்கையை அடுத்த இந்த ஊரடங்கு பின்பற்றப்பட்டது.
மக்கள் தாமாக முன் வந்து ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்து இருந்தார். அதை ஏற்று இன்று நாடு முழுக்க ஊரடங்கு பின்பற்றப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து மக்கள் எல்லோரும் வீட்டிற்குள் இருந்தனர். அதோடு இன்று மாலை மணிக்கு தங்கள் கதவு அருகே, அல்லது பால்கனி அருகே வந்து கை தட்டினார்கள் . நாடு முழுக்க சைரன் ஓலித்தனர். கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இப்படி செய்தார்கள். இதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்து இன்று பிரதமர் மோடி தனது டிவிட்டில், மக்கள் ஊரடங்கு இன்று இரவு 9 மணியோடு நிறைவு பெறும். ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது. நாம் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.
இதை ஒரு வெற்றி என்று யாரும் கருத கூடாது. நம்முடைய மிகப்பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான். இந்திய மக்கள் எந்த அளவிற்கு திறன் கொண்டவர்கள் என்று இன்றி நிரூபித்துள்ளோம்.
இந்திய மக்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய துயரத்தையும் இடைஞ்சலையும் கடக்க முடியும் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டில் நம்முடைய மிகப்பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.