Spotlightவிமர்சனங்கள்

நட்பே துணை விமர்சனம் 3/5

கெளசல்யாவின் மகனாக வரும் ஹிப் ஹாப் ஆதி, பிரான்ஸ்க்கு செல்ல காத்திருக்கும் பாண்டிச்சேரி மாணவன். இந்த சூழலில் காதலியை பார்த்ததும் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

காரைக்காலில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்லும் ஹிப் ஹாப் ஆதி மீண்டும் நாயகி அனகாவை சந்திக்க, அவர் மீது காதலில் விழுகிறார்.

ஹாக்கி வீரராக வரும் நாயகி ஹாக்கி செலக்‌ஷனில் அனகாவிற்கு பிரச்சனை ஏற்பட, அவருக்கு உதவ முன்வருகிறார் ஆதி. இவருடைய விளையாட்டை கண்டு அனைவரும் வியக்கின்றனர். அதற்கு பிறகு தான் தெரிகிறது ஆதி U19ல் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் கேப்டனாக இருந்தவர் என்று….

காரைக்காலில் பல போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹாக்கி கிரவுண்ட் ஒன்றிற்கு ஹரோஷ் உத்தமன் பயிற்சியாளராக இருக்கிறார்.

இந்நிலையில், பல நாடுகள் ஒதுக்கிய மருந்து கம்பெனி ஒன்றை பணத்திற்காக சென்னையில் உள்ள அந்த ஹாக்கி கிரவுண்ட் இடத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறார் தமிழக அமைச்சர் கரு. பழனியப்பன்.

ஹரிஷ் உத்தமன் பல வழிகளில் அந்த மைதானத்தை மீட்ட முயல்கிறார் முயலாமல் போகிறது. இறுதியாக ஹாக்கி போட்டியில் வென்றால் மட்டுமே கிரவுண்ட் கையை விட்டு போகாது என்ற சூழல் வருகிறது.

மைதானத்தை ஹரிஷ் உத்தமன் கைப்பற்றினாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

காதல், கலகலப்பு, நடனம், யதார்த்தம் என தனக்கே உரித்தான நடிப்பை கொடுத்திருக்கிறார் நாயகன் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு படத்திந் வெற்றியை இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் இடைவெளிக்கு  முன் வரும் காட்சிகள் படத்திற்கான உயிரோட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகி அனகாவிற்கு அவ்வளவான காட்சிகள் கொடுக்கப்படவில்லை என்றாலும், கொடுக்கப்பட்ட இடத்தில் அழகான கவிதையாக ஸ்கோர் செய்திருக்கிறார் அனகா.

பல படங்களில் வில்லனாக அவதரித்த ஹரிஷ் உத்தமன், இப்படத்தில் ஹாக்கி பயிற்சியாளராக நடித்து, தன்னால்  நாயகனுக்கான கதாபாத்திரத்திலும் ஜெயித்து காட்ட முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

பாண்டியராஜன், கௌசல்யா சில சீனியர்கள் இருந்தாலும், ஏதோ கடமைக்கு வந்துபோகும் மனிதர்கள் போல நடித்தது சற்று ஏமாற்றம் தான். யூட்யூப்பிரபலங்களான விக்னேஷ் காந்த், ஷாரா, சுட்டி அரவிந்த், பிஜிலி ரமேஷ் எருமசாணி விஜய் என ஒவ்வொருவரும் தங்களது இருப்பை ரசிகர்கள் மனதில் பதிய வைக்க முயற்சித்திருக்கிறார்கள். வில்லத்தனம் கலந்த எதிர்த்தரப்பு பயிற்சியாளராக குமரவேல் வழக்கம்போல சிறப்பான நடிப்பு.

ஒரு அரசியல்வாதி கேரக்டர் மூலம் வில்லன் நடிகராக மாறியிருக்கிறார் கரு.பழனியப்பன். ஒவ்வொரு வசனத்திலும் தனது மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மேலும் ஒரு வில்லன் அவதரித்திருக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்திற்கான உயிரோட்டம். அரவிந்த் சிங் அவர்களின் ஒளிப்பதிவு கலர்புல்.

சில லாஜிக் மீறல்கள் படத்தில் எட்டிப் பார்த்தாலும், படத்தின் இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிக்காகவே இயக்குனர் பார்த்திபன் தேசிங்குவை வெகுவாக பாராட்டலாம்.

நட்பே துணை – ஹாக்கி போட்டியை உரக்க சொன்னதால் நாமும் துணை நிற்போம்.

Facebook Comments

Related Articles

Back to top button