
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை தீபாவளி அன்று திரையிட படக்குழுவினர் மும்முரமாக பணி செய்து வருகின்றனர்.
இப்படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஏஜிஎஸ் நிறுவனம்.
இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்டில் நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு கிட்டத்தட்ட விஜய்யுடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறாராம்
ஏற்கனவே ‘மெர்சல்’, ‘சர்கார்’ என விஜய்யின் படங்களில் அடுத்தடுத்த நடித்துள்ள யோகிபாபு, ‘தளபதி 63′ படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து பேட்டி ஒன்றில், ”தெறி’ படத்தில் என்னை நடிக்க வைக்க அட்லி முயற்சித்தார்.
ஆனால் அந்த படம் மிஸ் ஆகிவிட்டதாகவும், ‘இந்த படத்தில் உங்களுக்கு படம் முழுவதும் விஜய்யுடன் டிராவல் செய்யும் கேரக்டர் என்று அட்லி தன்னிடம் கூறியதாகவும் யோகிபாபு கூறியுள்ளார். இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் ஜாலியாக இருக்கும் என்றும், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இந்த தீபாவளி வேற மாதிரி இருக்கும்’ என்றும் யோகிபாபு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.





