
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ஜோதிகா நடித்து மார்ச் 28 ரிலீஸ் ஆக இருந்த படம் பொன்மகள் வந்தாள்.
உலகம் முழுவதும் வந்த கொரானாவால் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போனது.
இதன் காரணமாக இப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் நிலவுவதால், இப்படத்தை ஓடிடி ப்ளாட்பார்மில் விற்க இந்நிறுவனம் முடிவு செய்தது.
அதற்காக பிரபல டிஜிட்டல் நிறுவனத்திடம் ரிலீஸ் செய்ய பேசப்பட்டது அந்த நிறுவனமும் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி கொண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் ஒரு மடங்கு லாபம் கிடைத்துள்ளது.
இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜோதிகாவின் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால், இனிவரும் அந்த பட தயாரிப்பாளரின் படத்தை நாங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம் என எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இந்த டிஜிட்டல் ரிலீசுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.
அதோடு, ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கே முழு அதிகாரம் உள்ளது. படத்தை எங்கு ரிலீஸ் செய்ய வேண்டும் வேண்டாம் என்று அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அடுமட்டுமல்லாமல், தொழில் பாதுகாப்பு இருக்க வேண்டும். தனது தயாரிப்பை லாபத்தோடு வியாபாரம் செய்ய ஒரு வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை.
ஆகவே, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தால் படம் டிஜிட்டல் ப்ளாட் பார்மில் ரிலீஸ் செய்வதற்கு எனது முழு ஆதரவும் உண்டு என கூறியுள்ளார்.