Spotlightசினிமாதமிழ்நாடு

அள்ளி கொடுத்த தளபதி; லட்சம் ரசிகர்களுக்கு நேரடி பண உதவி!!

கொரோனாவால் இந்தியா மட்டுமல்ல உலகம் வரையிலும் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகின்றனர்.

தளபதி விஜய் கொரொனாவிற்காக ரூ 1.3 கோடியை நிவாரணமாக கொடுத்தது அனைவரும் அறிந்தது தான். அதை தாண்டியும் விஜய் தன் ரசிகர்களுக்கும் உதவி செய்துள்ளார்.

இந்த சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் தன் ரசிகர்களுக்கு தளபதி தன் ரசிகர் மன்ற சார்பாக சுமார் 1.5 லட்சம் ரசிகர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி வருகிறாராம்.

பலரும் இச்செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button