ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ‘60 வயது மாநிறம்’.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.
படத்தினை குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறும்போது, ‘கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக 60 வயது மாநிறம் அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
Facebook Comments