Spotlightதமிழ்நாடு

ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! – உருகிய ஸ்டாலின்!!

எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே!

என் உடலில், உணர்வில், ரத்தத்தில், சிந்தனையில், இதயத்தில் இரண்டரக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்க விட்டு எங்கே சென்றீர்கள்?

”ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா?

95 வயதி, 80 ஆண்டு பொது வாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ‘நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீகளா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்தநாளாம் சூன் 3ஆம் நாள் நான் பேசும்போது, உங்கள் சக்தியில் பாதியை தாருங்கள்’ என்றேன். அந்த சக்தியையும் பேரஞர் அண்ணாவிடன் இரவலாக பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்.

தருவீர்களா தலைவரே!
அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத
உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும்
வென்று காட்டுவோம்.

கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து
ஒரு வேண்டுகோள்…. ஒரே ஒரு முறை…
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…!”
என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!

“அப்பா அப்பா” என்பதை விட, “தலைவரே தலைவரே”
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒருமுறை, இப்போது ‘அப்பா’
என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?

கண்ணீருடன்,
மு.க.ஸ்டாலின்

Facebook Comments

Related Articles

Back to top button