Spotlightசினிமாவிமர்சனங்கள்

Project C – Review 3/5

யக்குனர் வினோ இயக்கத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “PROJECT C”. வெளியான படத்தின் டீசரின் மேக்கிங்க் உற்று நோக்க வைத்ததால் படத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்தது. எழுந்த எதிர்பார்ப்பை படத்தில் இயக்குனர் பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

பட்டப்படிப்பு முத்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வாழ்க்கையே வெறுத்து சாகக் கூட துணிகிறார் நாயகன் ஸ்ரீ.

தனது நண்பன் ஒருவரது உதவியால், பக்கவாதம் வந்த பெரியவர் ஒருவரை 24 மணி நேரமும் பார்த்துக் கொள்ளக்கூடிய வேலை கிடைக்கிறது.

அந்த வேலையை வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ. வயதில் மூத்த மாமனை திருமணம் செய்து கொண்டு எவ்வித சந்தோஷ சுகத்தையும் அனுபவிக்காமல் அந்த முதியவரின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வருபவர் வசுதா கிருஷ்ணமூர்த்தி.

வசுதாவிற்கும் ஸ்ரீக்கும் ஊடல் ஏற்பட, வசுதாவை ”வா நாம் எங்கேயாவது சென்று சந்தோஷமாக வாழலாம்” என அழைக்கிறார் ஸ்ரீ. அதற்கு ”பணம் இருந்தால் தானே வாழ முடியும்” என்று வசுதா கூற, ”பணம் என்னிடம் அதிகமாக இருக்கிறது” என்று கூறுகிறார் ஸ்ரீ….

ஸ்ரீயிடம் ஏது அவ்வளவு பணம் என்று அதிர்ச்சியாகிறார் வசுதா…. அதன் பிறகு என்ன நடந்தது? ஸ்ரீ’க்கு அதிக பணம் கிடைத்தது எப்படி.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் மிகப்பெரும் பலமே, ஆங்காங்கே வரும் ட்விஸ்ட் காட்சிகள் தான்… கதையை மிக வலுவாக தயார் செய்து கதைக்களத்திற்கு சென்றிருக்கிறார் இயக்குனர் வினோ.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீ, தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தனது நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் பலமே பஞ்சவர்ணமாக வாழ்ந்த வசுதா கிருஷ்ணமூர்த்தி தான்.. கதாபாத்திரத்தை நன்றாக புரிந்து கொண்டு மிகவும் யதார்த்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ”இடை”யழகி வசுதா. படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் எதற்கு இந்த இடையழகி பட்டம் என்று…

இவர் எடுக்கும் ரிவெஞ்ச் காட்சிகள் அல்டிமேட். சிபு சுகுமாரின் பின்னணி இசை கதையோடு நாமும் பயணம் புரிய பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
சதீஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தனது முத்திரையை முத்தம் பதித்து சென்றிருக்கிறார் சாம்ஸ்.

மொத்தமாக ஆறு கதாபாத்திரத்தை வைத்து ஒட்டுமொத்த படத்திலும் உயிரோட்டம் கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வினோ.

அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் காட்சிகள் பலம்…. கதாபாத்திரங்களின் கதைக்களத்தை இன்னும் சற்று விரிவுப்படுத்தியிருந்திருக்கலாம்..

Project C – Project success

Facebook Comments

Related Articles

Back to top button