Spotlightசினிமாவிமர்சனங்கள்

கனெக்ட் – விமர்சனம் 2.5/5

யக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கனெக்ட். ஏற்கனவே மாயா, கேம் ஓவர் என இரு ஹாரர் படங்களை இயக்கிய அஸ்வின், இந்த படத்தையும் ஹாரர் படமாகவே இயக்கியிருக்கிறார். கனெக்ட் ரசிகர்களிடையே கனெக்ட் ஆகியிருக்கிறதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

சென்னையில் கொரோனா லாக்-டவுன் சமயத்தில் நடைபெறுவது போல் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த சத்யராஜுக்கு மகளாக வருகிறார் நயன்தாரா. இவரது கணவராக வினய். இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஹனியா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

மருத்துவரான வினய், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவரும் கொரோனாவிற்கு பலியாகிறார். தந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் அவரின் இழப்பை ஹனியாவால் தாங்க முடியவில்லை.

தந்தையின் ஆவியிடம் பேச வேண்டும் என்று ஒருவரின் உதவியோடு ஆவியை வரவைக்கிறார் ஹனியா. ஆனால், அங்கு வந்ததோ ஒரு ஆபத்தான ஆவி. அந்த ஆவி, ஹனியாவின் உடம்பிற்குள் சென்று விட, இறுதியாக ஹனியாவை நயன்தாராவும் சத்யராஜும் காப்பாற்றினார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் நயன்தாரா. ஒரு சில இடங்களில் “நான் நடிக்கிறேன்… நான் நடிக்கிறேன்” என்று சொல்வது போன்று தனது நடிப்பை நடிப்பாக வெளிக்காட்டியிருப்பது சற்று சங்கடமே. இருந்தாலும் தனது அனுபவ நடிப்பை பல இடங்களில் வெளிக்காட்டி நம்மை அசர வைத்திருக்கிறார் நயன்தாரா.

நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜின் நடிப்பை பாராட்ட இன்னும் சற்று நல்ல நடிப்பைக் கொடுத்திருந்திருக்கலாம். ஒரு சில காட்சிகள் என்றாலும் தனக்கான முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார் வினய்.

படத்தின் ஒரு பில்லராக நின்றது ஹனியா தான். அழகோடு சேர்ந்து மிரட்டலையும் கலந்து கொடுத்து அசரடித்திருக்கிறார் ஹனியா. ஆவி புகுந்த சமயத்தில் இருந்து இவர் ஆடும் ஆட்டமே திரையரங்கை திகைக்க வைக்கிறது.

படத்தின் மிகப்பெரும் பில்லராக வந்து நின்றது சவுண்ட் இன்ஞ்சினியர் தான். டேபிள் நகரும் சத்தம், கதவு மூடும் சத்தம், ஆவி வரும் சத்தம் என்று பயமுறுத்தும் காட்சிகள் வரும் இடங்கள் அனைத்திலும் தனிக்கவனம் செலுத்தி விளையாடியிருக்கிறார் இவர்.

மணிகண்டனின் ஒளிப்பதிவும் பாராட்டத்தக்கது. ப்ரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை கதையோடு பயணம்.

எப்போதும் தனக்கென தனி முத்திரை பதித்த கதையை கொடுக்கும் இயக்குனர் அஸ்வின், இந்த படத்தில் ஏனோ அதை கொடுக்காமல் சென்றது சற்று ஏமாற்றம் தான். ஹாலிவுட்டில் மட்டுமல்ல பல சினிமாக்களில் பார்த்த கதையையும், பார்த்த காட்சிகளையும் உள்ளே புகுத்தி தனக்கான தனித்துவத்தை இழந்திருக்கிறார் அஸ்வின்.

ஆவி புகுந்த ஹனியா மூலையில் ஏறி நிற்பதும், சிலுவை தலைகீழாக இருப்பதும், கபோர்டில் ஏறிக்கிடப்பதும், கட்டில் மேலே தூக்கி தூக்கி போடுவதும் என நிறைய இயக்குனர்கள் அரைத்த மாவையே இவரும் அரைத்து வைத்திருக்கிறார்.

வெறும் 99 நிமிடங்களில் படம் முடுந்துவிடும் என்பது தான். ஆனால், இருக்கும் நேரத்தை விரைவாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் வேகத்தை அதிகரித்து நம்மை அசர வைத்திருக்கிறது.

கனெக்ட் – பெரிதாக “கனெக்ட்” ஆகவில்லை என்பதே நிதர்சனம்..

Facebook Comments

Related Articles

Back to top button