Spotlightசினிமா

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ… இணையத்தை கலக்கும் பப்ஜி பாடல் முன்னோட்டம்!!

தாதா 87 வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா,நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், அனித்ரா, ஆராத்யா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் தான் பொல்லாத உலகின் பயங்கர கேம்…

இப்படத்திற்கு லியாண்டர் மார்ட்டி இசையமைத்து வருகிறார்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி, பாடிய ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடல் நேற்று விஜயதசமி அன்று நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இப்படத்தின் பாடல்களை
“டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது

பொங்கல் அன்று உலகமெங்கும் வெளியிடப்படும் இப்படத்தின் இசை தீபாவளியன்று வெளியாகிறது.

பொல்லாத உலகில் பயங்கர கேம்( PUBG) படம் தீபாவளி சரவெடியுடன் ஆரம்பித்து (இசை, ட்ரெய்லர்) பொங்கலின் போது கரும்பு சுவையுடன் (திரையரங்குகளில்) வெளியாக உள்ளது.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என தொடங்கும் இந்த பாடல் இணையத்தில் பெரும் வைரல் ஆகி வருகிறது..

மொழி, மதம், பாலியல் என நாளுக்கொரு பிரச்சனைகள் நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

https://youtu.be/49WbQS345LE

Facebook Comments

Related Articles

Back to top button