
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் ‘பிகில்’. மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தி பாக்ஸ் ஆபீஸில் ரெக்கார்ட் படைத்தது இந்த படம்.
இப்படத்திற்கு பிறகு, தளபதி விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வருகிறது ‘தளபதி 64’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதன் இரண்டாம் வில்லனாக நடித்து வருகிறார் ஆண்டனி வர்கீஸ். இந்த கதாபாத்திற்கு முதலில் பிக் பாஸ் சீசன் 3 சாம்பியன் முகேன் தேர்வு செய்யப்பட்டார். சம்பளமாக 3 கோடி வேண்டும் என்று ஆரம்பித்து பேரம் பேசப்பட்டது முகேன் தரப்பில் இருந்து.
இதில் கடுப்பான தயாரிப்பு தரப்பு, முகேனை நிராகரித்து வெளியே அனுப்பியது. அதற்கு பிறகு தான் ஆண்டனி வர்கீஸ் தேர்வு செய்யப்பட்டாராம்.
என்னதான் டைட்டில் வின்னராக இருந்தாலும், எடுத்த எடுப்பிலே 3 கோடி சம்பளம் கேட்பது கொஞ்சம் ஓவராக இல்லையா முகேன் சார்… அதுவும் தளபதி படத்துல..





