Spotlightசினிமா

விஷாலின் ‘ஆக்‌ஷன்’; ரிலீஸ் தேதி இதோ!

விஷால் நடிக்க சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘ஆக்‌ஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் – சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.

இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 15ம் தேதி ரிலீஸ் என்று விஷால் அறிவித்திருக்கிறார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button