Spotlightசினிமா

‘புதுப்பேட்டை 2’ உறுதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்!

 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ‘புதுப்பேட்டை’.

தனுஷின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக இது அமைந்தது. அந்த படத்தில் உருவாக்கப்பட்ட ‘கொக்கி’ குமார் என்ற கதாபாத்திரம் இன்று வரையும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகாது என தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்ல,பல ரசிகர்களும் ஏங்கி இருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட தனுஷ், புதுப்பேட்டை 2 நிச்சயம் உருவாகும் என்று தகவல் அளித்துள்ளார்.

இப்படத்திற்கான ஆயத்த பணிகள் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் தனுஷ் கூறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button