Spotlightசினிமா

குழந்தைகளை ”ராயன்” படம் பார்க்க அழைத்துச் சென்ற தனுஷ் ரசிகர்கள்… வலுக்கும் எதிர்ப்பு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் படம் தான் “ராயன்”. படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் படத்திற்கு “A” சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ள நிலையில், வசூலிலும் சரிவை சந்தித்து வருகிறது ராயன்.

இந்நிலையில், சிதம்பரத்தில் தனுஷ் ரசிகர்கள் மன வளர்ச்சி குன்றிய பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளை படம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர்.

இப்படம் 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான படம் என்று தெளிவாக கூறிய பிறகும், தனுஷ் ரசிகர்கள் குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்துச் சென்று படம் பார்க்க வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இச்செயலைக் கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button