
நடிகர் சங்க செயலாளராக நடிகர் விஷால் உள்ளார். தற்போது நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் விஷாலுக்கு எதிராக, புதிய அணி உருவாகியுள்ளது. நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவிக் காலம், கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது.
ஆனால், நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை, 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில், எதிர் அணியினர், ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விஷாலை எதிர்த்து நடிகர் உதயா போட்டியிடவுள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments