
தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய சுகாதாரா துறை செயலாராக ஜெ. ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து கொரோனா பரவல் சிறப்பு அதிகாரியாக ஜெ. ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, புதிய சுகாதாரத் துறை செயலாளராக ஜெ.ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராதாகிருஷ்ணன் தற்போது வருவாய் நிர்வாக ஆணையர் ஆக இருக்கும் நிலையில், அந்தப் பணியினையும் அவர் தொடர்ந்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments




