தமிழ்நாடு

”வேண்டாம்னு முடிவு செஞ்சாச்சு.. அப்புறம் எதுக்கு அஞ்சலி செலுத்தனும்”: அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிமுக சார்பில் எவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ‘நடராஜன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தியிருந்தால் அதிமுக தொண்டர்கள் அதனை ஏற்கமாட்டார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினால் அதிமுக தொண்டர்கள் அதனை ஏற்கமாட்டார்கள். வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு அங்கு நாங்கள் எதற்கு போக வேண்டும்” என குறிப்பிட்டார்.

Facebook Comments

Related Articles

Back to top button