
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமார், சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் நடிக்க உள்ளார்.
இவர்கள் முதல் முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு விஸ்வாசம் படத்தின் மூலமாக பிரபலமடைந்த ஒளிப்பதிவாளர் வெற்றி தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
விஸ்வாசம் படத்தில் வெற்றியின் ஒளிப்பதிவு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments