Spotlightசினிமா

ரஜினியை நேரில் சந்தித்த எம். செண்பகமூர்த்தி! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திரைப் பிரபலங்கள்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் எம். செண்பகமூர்த்தி இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜி.கே.எம். தமிழ்குமரன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் பி. சக்திவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், பல்வேறு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டு எம். செண்பகமூர்த்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button