சென்னை: சில தினங்களுக்கு முன் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி முடித்து அனைவரும் ஊர் திரும்பும் வேளையில் ரசிகர் ஒருவர் தனது கால்களை ரயில் பயணத்தின் போது இழந்துள்ளார்.
இந்நிலையில், ரயிலில் சிக்கி கால்களை இழந்த ரசிகர் காசி விஸ்வநாதனுக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி வழங்கியுள்ளார். மருத்துவமனைக்கு சென்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் நிதியுதவியை வழங்கியுள்ளார்.
மேலும் காசிவிஸ்வநாதன் குணமானபிறகும் தேவையான உதவி வழங்குவதாக சுதாகர் மூலம் ரஜினி தெரிவித்துள்ளார்.
Facebook Comments