Spotlightவிமர்சனங்கள்

தர்பார்; விமர்சனம் 4/5

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இன்று அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்க்கும் படம் தான் ‘தர்பார்’.

ரெளடியாக வரும் சுனில் ஷெட்டி, பல வருடங்களுக்கு முன் மும்பையில், 17 போலீஸாரை போலீஸ் நிலையத்தில் வைத்து எரித்து விடுகிறார். அதன் பிறகு தலைமறைவாகி விடுகிறார் சுனில் ஷெட்டி.

இந்நிலையில், போலீஸார் எவரும் மும்பையில் பணிபுரிய அச்சப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால், மும்பை போதை பொருளின் கூடாரமாக திகழ்கிறது.

மீண்டும் மும்பையை பழைய நிலைக்குக் கொண்டு வர, மும்பை போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்படுகிறார் ஆதித்ய அருணாச்சலம் (ரஜினி). பல ரெளடிகளை என் கவுண்டர் செய்கிறார்

போதை பொருளின் கடத்தல் மன்னனாக திகழும் பிரதேக்கை கைது செய்கிறார் ரஜினி. ஒரு கட்டத்தில் பிரதேக் கொல்லப்படுகிறார்.

மும்பை வரும் சுனில் ஷெட்டி, ரஜினை கொல்ல நினைக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே தர்பார் படத்தின் மீதிக் கதை….

ரஜினி என்ற ஒருவரே படத்தினை முழுவதும் தாங்கி கொண்டு செல்கிறார். ஸ்டைல், ஆக்‌ஷன் , காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் ரஜினிக்கான ஸ்கோர் எகிறி அடித்துள்ளது.

யோகிபாபுவுடன் ரஜினி அடிக்கும் டைமிங்க் காமெடி காட்சிகள் திரைரயரங்குகளில் சிரிப்பலையால் அதிர வைத்துள்ளது. அறிமுக காட்சியிலேயே வரும் ஸ்டண்ஸ்ட் காட்சிகள் அதிரடியோ அதிரடி…

நயன்தாராவோடு ரஜினி அடிக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

ரஜினி மற்றும் நிவேதா தாமஸ் இருவருக்குமான தந்தை மற்றும் மகள் செண்டிமென்ட் காட்சிகள் கண்களில் கண்ணீரை எட்டி பார்க்க வைக்கிறது. நிவேதா தாமஸ் சிறப்பான நடிப்பு.

அனிருத் இசையில் சும்மா கிழி பாடல் வேற லெவல் ரகம்….. பின்னனி இசையும் அதிரடி தான்.

வில்லனாக வரும் சுனில் ஷெட்டி சரியான தேர்வு தான். இரண்டாம் பாதியில் திருநங்கை நடனத்தோடு வரும் சண்டைக் காட்சி மாஸ் தான்… இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மிரட்டலை ஏற்றியிருந்திருக்கலாம்…

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்கு சரியான விருந்தாகவே பார்க்கவே முடிகிறது. இரண்டாம் பாதியில் கதையில் சற்று தொய்வு ஏற்பட விடாமல் பார்த்திருந்தால் தர்பார் இன்னும் மிரட்டலான கொண்டாட்டமாக மாறியிருக்கும். படம் முடிந்த பிறகு இந்த வயதிலும் இப்படியொரு எனர்ஜியா என்று தான் ரஜினியை பார்த்து கேட்க தோன்றுகிறது.

தர்பார் – தரமான பொங்கல் கொண்டாட்ட படம் தான்..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close