Spotlightஇந்தியாசினிமா

முஸ்லீம்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் – ரஜினிகாந்த்!!

சிறிது நேரத்திற்கு முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை.

இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போராடுவேன்

இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்படுகிறது.

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன.

குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

என்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Facebook Comments

Related Articles

Back to top button