Spotlightவிமர்சனங்கள்

எல் கே ஜி விமர்சனம் 2.75/5

ஆர் ஜே பாலாஜி முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்திருக்கும் படம் தான் ‘எல் கேஜி’. இப்படத்தின் ஆரம்பம் முதலே அரசியல் கலந்த காமெடி படமாக இருக்கும் என்ற பார்வை மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டுவிட்டது. அது எந்த அளவிற்கு எடுபட்டது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

தனது தந்தை(நாஞ்சில் சம்பத்)தான் அரசியலில் இருந்து எதுவும் சாதிக்கவில்லை, தானாவது அரசியலில் பெரியாளாக ஆகவேண்டும் என்ற எண்ணம் உள்ள நம் கதாநாயகன் RJ பாலாஜி.

ஒன்றிய கவுன்சிலர் பதவியை தக்க வைக்கும் ஆர் ஜே பாலாஜி, பதவியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற நினைக்கிறார். அந்த அரசியலில் ஜெயிப்பதற்காக சில குறுக்கு வழிகளை கையாள்கிறார்.

இதனால் அதே தொகுதியில் உள்ள ஒரு மாமனிதன், அரசியல் சாணக்கியன் ராம்ராஜ் பாண்டியன் (ஜே கே ரித்தீஷ்) அவரை வீழ்த்தினால் மட்டுமே நாம் இங்க பெரியாளாக ஆக முடியும் என்ற எண்ணத்தில் சில தத்ரூபங்களை கையாண்டு அவரை வீழ்த்தி எப்படி வெற்றி அடைகிறார் என்பதே இந்த படத்தின் கதை.

முதல் முறை ஹீரோவாக களம் இறங்கியுள்ள ஆர் ஜே பாலாஜி, தனக்கான டைமிங் காமெடி வியூகத்தை இதில் பயன்படுத்தியிருக்கிறார்.ஆனால், அவ்வப்போது மட்டுமே இந்த காமெடி வொர்க் அவுட் ஆகியுள்ளது. காதல், கோபம் என எந்த வித ரியாக்‌ஷனும் எட்டிப் பார்க்கததால் படத்தின் ஓட்டத்திற்கு இது பெரிய சறுக்கலாக தான் அமைந்துள்ளது.

படத்தின் நாயகியாக வரும் ப்ரியா ஆனந்த், கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், அவரின் கதாபாத்திரமும் செயற்கையாகவே எடுக்க முடிகிறது. நாஞ்சில் சம்பத் தனது கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தியிருந்தாலும், அவருக்கான் இடம் கொடுக்கப்படவில்லை.

ஜே கே ரித்திஷின் கதாபாத்திரம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. சிவாஜியின் மகன் ராம் குமாரின் கதாபாத்திரம் சற்று நேரம் வந்தாலும், தனது கதாபாத்திரத்தை வலுவாக செய்து முடித்துள்ளார்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பின்னனி இசை ஓகே ரகம் என்றாலும், பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. கே ஆர் பிரபுவின் இயக்கம் ஓகே ரகம்.

தற்போதைய அரசியலில் ஏற்பட்ட சில பல காமெடி தருணங்களை வைத்து எடுக்கப்பட்ட சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. அலுத்துப் போன கதை, திரைக்கதை என்றாலும் ரசிக்க முடிகிறது.

எல் கே ஜி – ஆர் ஜே பாலாஜி சினிமா என்ற பள்ளியில் ‘எல் கே ஜி’ பாஸ் ஆகியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button